உருக் குழைந்த உ த்தர்காண்ட்டில் உச்சகட்ட கொடூரம் ! வெள்ளத்தில் சிக்கியோரிடம் கொள்ளையடித்த சாமியார்கள் !
உருக் குழைந்த உ த்தர்காண்ட்டில் உச்சகட்ட கொடூரம் !
வெள்ளத்தில் சிக்கியோரிடம் கொள்ளையடித்த சாமியார்கள் !
வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இத்தகைய படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்று யாத்ரீகர்கள் இறைவனுக்கு சமமாக வணங்கக் கூடிய சாமியார்கள் என்பதை மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து சுமார் சேறும் சகதியுமாக நனைந்து போய் இருந்த ரூ1.25 கோடி பணம் கைப்பற்றபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கேதார்நாத்தில் இருந்த ஒரே ஒரு வங்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பணப்பெட்டிகளும் வெள்ளம் வாரிச் சுருட்டியது. கேதார்நாத் கோயிலின் உண்டியலும் பொக்கிஷங்களும் கூட வெள்ளத்தால் திறந்துவிடப்பட்டன. இந்நிலையில் மீட்புப் பணிக்காக வரிசையில் காத்திருந்த பல சாமியார்களிடம் புது நோட்டுகளும் இதுவரை பயன்படுத்தாத நோட்டுகளும் ஏராளமாக இருந்தன. அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் பல ரூபாய் நோட்டுகள் கேதார்நாத் வங்கிக்குரியது என தெரியவந்தது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர். இதேபோல் ஒரு பாபாபா தன்னுடைய டோலக் எனப்படும் டிரம்மில் ரூ62 ஆயிரம் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். மற்றொருவர் பிரசாத பாக்கெட்டில் ரூ10ஆயிரத்தை பதுக்கி வைத்திருந்தாராம்.. மற்றொரு சாமியார் தம்முடைய துணிகளுக்கு இடையே ரூ1.2 லட்சத்தை பதுக்கி இருந்திருக்கிறார். இன்னும் சில சாமியார்கள் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான நகைகளையும் வளையல்களையும் அணிந்து நடமாடியுள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதில் உச்சகட்ட கொடூரம் என்னவெனில் சில சாமியார்கள் யாத்ரீகர்களின் விரல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என்பதுதான்...
தகவல் ஒன் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக