அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?
உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? :
எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
திமுக தலைவர் கலைஞரை, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., சந்தித்து மாநிலங்களவை தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் வெளியே வந்ததும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’ மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எங்கள் தலைவர் ரிபாய் தலைமையில் தி.மு.கழகத் தலைவர் கலைஞரை இன்று சந்தித் தோம். வருகின்ற 27ஆம் தேதிநடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பாக போட்டியிடக்கூடிய சகோதரி கனிமொழி அவர்களுக்கு மனிதநேய மக்கள்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எங்களுடைய கட்சியின் ஆதரவை தெரிவிப் பதற்காக தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று நாங்கள் சந்தித்தோம்’’என்றார் எம்.எச். ஜவாஹிருல்லா.
இதுவரை அ.தி.மு.க. ஆதரித்த தாங்கள் திடீரென்று தி.மு.க.வை ஆதரிக்க காரணம் என்ன?
எம்.எச்.ஜவாஹிருல்லா :- மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் நான்கு வேட்பாளர்களும் அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற டி. ராஜாவும் வெற்றி பெற அ.தி.மு.க.வின் போதுமான வாக்குகள் அளிக்கப்பட இருக்கிற இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே தி.மு.கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் என்ன செய்வீர்கள்?
எம்.எச்.ஜவாஹிருல்லா :- அதுபற்றி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் பேசமுடியும். மாநிலங் களவை தேர்தலுக்கு மட்டும் இப்போதுஇந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா :- அதுபற்றி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் பேசமுடியும். மாநிலங் களவை தேர்தலுக்கு மட்டும் இப்போதுஇந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
அ.தி.மு.கவிடம் கூட்டணி கிடையாதா?
எம்.எச்.ஜவாஹிருல்லா :- அ.தி.மு.க.வுடன் கடந்த சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அதற்குப் பிறகு நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும், அது உள்ளாட்சிமன்றத் தேர்தலாக இருந்தாலும், கூட்டுறவுத்தேர்தலாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இல்லை.

அவர்களோடு உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா?
எம்.எச்.ஜவாஹிருல்லா :- இந்தத் தேர்தலில், அதாவது மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழகத்திற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா :- இந்தத் தேர்தலில், அதாவது மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழகத்திற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம்.
nanri nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக