வகுப்புவாத உணர்வை தூண்டி வாக்கு வங்கியை திரட்ட அயோத்திக்கு செல்லும் மோடி!
18 Jun 2013
அயோத்தி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அயோத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களவை தேர்தல் வரவிருக்கும் வேளையில் சமூகங்களிடையே பிளவை உருவாக்கி ஆதாயம் தேடும் நோக்கில் மோடி பா.ஜ.கவின் பிரச்சாரக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அயோத்திக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இவ்வாரம் புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மோடி அயோத்திக்கு செல்கிறார்.இதற்கு முன்னோடியாக சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீன் தொக்காடியா, கோரக்பூர் பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யாநாத், யோகா குரு ராம்தேவ் ஆகியோர் இன்று அயோத்திக்கு செல்கின்றனர். இத்தகவலை வி.ஹெச்.பி ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார். அயோத்தியில் பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் மோடி வழிபாடுச் செய்யப்போகிறாராம். பொது தேர்தலில் அயோத்தி விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏற்கனவே பா.ஜ.க உறுப்பினர்களுக்கு மோடி தெரிவித்துள்ளார். ராமஜென்ம பூமி ட்ரஸ்டின் தலைவர் மஹந்த் கோபால்தாஸ் உள்ளிட்ட ஹிந்து தலைவர்களையும் மோடி சந்திக்கிறார்.
அயோத்தியில் முதன்முறையாக மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.1998-ஆம் ஆண்டு அத்வானியுடன் சேர்ந்து மோடி அயோத்தியாவுக்கு சென்றார். மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் அப்போது மோடி செல்லவில்லை. ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்பதை இந்நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக