அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இன்ஷா அல்லாஹ் 19.07.2011 இன்று காஷ்மீர் மக்களின் வாழ்வியல் குறித்து நடைபெறும் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க காஷ்மீர் செல்கிறேன்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் காந்திய அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் பல்வேறு மனிதநேய தொண்டு அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வில் இந்தியா முழுவதிலிருந்தும் 250 பேர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கேற்கிறார்கள். எனது பயணத்தின் மூலம் காஷ்மீர் குறித்து விரிவான பல செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது குறித்து நான் அங்கு சென்று வந்ததும் விரிவான பயணக்கட்டுரை ஒன்றை அனைவருக்கும் வழங்குகிறேன். ஆகஸ்ட் 1&ம் தேதி அன்று தமிழகம் திரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ்...
எமது பயணம் பயனுள்ள வகையில் அமைய பிரார்த்தியுங்கள்....
அன்புடன்...
எம்.தமிமுன் அன்சாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக