வெள்ளி, 16 டிசம்பர், 2016

இதுல யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்?

அப்துர் ரஹ்மான்
பணமில்லா இந்தியா,,?!😂😂😂
*ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*
*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*
*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, பாலியல் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*
*இப்ப நம்ம புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?*
*வேலைக்கார அம்மாவோட பேடிஎம் ஆப்ல 1%, டீக்கடையில ஆபல 1%, பால் பண்ணையில ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பேடிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பேடிஎம் ஆப்ல 1% இப்பிடி பேடிஎம் பாக்கெட்ல 5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = 24.50/- போயிடும். 500 ரூவாவ ஆரம்பிச்ச ட்ரான்ஸாக்‌ஷன் லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது 475.50 ஆகிடும்.*
*(குறிப்பு: இப்போதைக்கு டிரான்ஸாக்‌ஷன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக ̀̀1% ஆ எடுத்துக்கிட்டோம்)*
*இதுல யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்? இப்பவாவது புரிஞ்சிக்கோங்க இது யாருக்கான திட்டம்னு .*

திங்கள், 12 டிசம்பர், 2016

காரி துப்பிய வெளிநாட்டு பத்திரிக்கைகள்!


மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு.

1). தி கார்டியன் பத்திரிகை – The Guardian ( லண்டன்).
செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது..

2). தி நியூயார்க் டைம்ஸ் – The New York Times: ( நியூயோர்க்)
இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை. இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.
புளூம்பெர்க் Bloomberg 
புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.
இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.
சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.
ஹெரால்டு Herald:
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன. 

புதன், 13 மே, 2015

சிந்திக்கவும்: ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!

சிந்திக்கவும்: ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!: ஆண்மையை  குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.   ஆண்குறின் இரத்த ஒட்ட...

நாதாரி தனம் பண்ணினாலும் நாசுக்கா!?


சத்தியமங்கலத்தில் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலையிட்டு சிலையை உடைத்த வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம் நடப்பது எனக்கு தெரிய வந்தது. இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர் செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால் தான் அப்படி செய்தேன் என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.
பிள்ளையாரை வைத்து அரசியல் செய்துகிட்டே அவருடைய சிலையை உடைத்து தமிழகத்தில் ஒரு மதகலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக ஆர் எஸ் எஸ் ஹிந்து முன்னணி டவுசர் பாண்டிகளின் சதி அம்பலம்.
இவர்களை ஹிந்து மதத்தின் காவலன் என்று நம்பும் அப்பாவி ஹிந்து சகோதரர்கள் சிந்திப்பார்களா?.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பெண்களே ஜாக்கிரதை!

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை! இராமகோபாலனின் பொறி உங்களுக்காக காத்திருக்கிறது

"
பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள். ஏமாந்து விட வேண்டாம்!!."

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி திருமணம் செய்யும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1.
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது

2.
அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது

3.
மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது

4.
பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது

5.
மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது

6.
பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

7.
வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்டப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது

8.
அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது..

9.
பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)

1.
அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்

2.
ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்

3.
தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்

4.
வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது

5.
பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது

6.
வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்

7.
தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவுசெய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே

8.
கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே

9.
கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10.
பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

11.
தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன

12.
உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

12.
முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்

14.
பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்

15.
வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ப்ளூபிலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்

இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னணி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் என்றும் எந்த போலீஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்

ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்

கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???

அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.

வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமணம் செய்கின்றார்.. சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..

தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.

தனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெரிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.

தொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்ணின் தனிமையையும், அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உறவு கொள்கின்றான்.

கணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெரிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.

காலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான், வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.

அவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பணம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.

கதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திரிகிறாள்.

இது அண்மையில் நடைபெற்ற ஒரு உண்மைச்சம்பவம். கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆக பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள். ஏமாந்து விட வேண்டாம்!!.

பெற்றோர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,

சிந்திப்பீர் செயல்படுவீர்!!
சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!
சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....

thanks to 
Anñisa |
முஸ்லிம் பெண்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மலப்புறத்தில் குஜராத்தை நிகழ்த்துவோம்!-பிரவீன் தொகாடியாவின் வெறிப் பேச்சு!

கேரளா:மலப்புறத்தில் குஜராத்தை நிகழ்த்துவோம்!-பிரவீன் தொகாடியாவின் வெறிப் பேச்சு!

ஆலப்புழா(கேரளா):வகுப்புவாத விஷம் கலந்த வெறித்தனமான உரையை நிகழ்த்தி ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முஸ்லிம் மக்கள் தொகையை பெருக்கி மலபாரை ஒரு முஸ்லிம் மாநிலமாக மாற்றக்கோரினால் முஸஃபர் நகரும், குஜராத்தும், கொக்ராஜரும் நிகழும் என்று தொகாடியா மிரட்டியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.வி பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த பஜ்ரங்தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மாநில பிரதிநிதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக ஹிந்து ஸ்வாபிமான் மாநாட்டை துவக்கி வைத்து பிரவீன் தொகாடியா உரையாற்றினார்.
பிரவீன் தொகாடியா வகுப்பு வாத விஷம் கலந்த உரையை நிகழ்த்தும்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலீஸார் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தொகாடியா தனது உரையில் மேலும் கூறியது:
மலபாரில் தனி மாநிலத்திற்காக கோருபவர்கள் குஜராத்தும், முஸஃபர் நகருக்காகவும் காத்திருக்கவும்.முஸ்லிம் லீகும், பாப்புலர் ஃப்ரண்டும் ஒரே லட்சியத்திற்காக பாடுபடுகின்றார்கள்.தனி முஸ்லிம் மாநிலம் கோரும் முஸ்லிம் லீக் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும்.இனியொரு ஜின்னாவுக்கு இந்தியாவில் இடமில்லை.இஸ்லாமிய தேசத்திற்காக வாதிடும் முஸ்லிம்கள் காந்திக்கு அல்ல தொகாடியாவிடம் பதில் அளிக்கவேண்டும் என்பதை அவர்கள் நினைவில் நிறுத்தவேண்டும்.
முஸ்லிம் லீகின் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டும்.பண வீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம்,முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கமாகும்.இதனால் துயரத்தை ஹிந்துக்கள்அனுபவிக்கின்றார்கள்.
மதசார்பற்ற இந்தியாவாக நீடிக்க பொது சிவில் சட்டத்தை அமலாக்கவேண்டும்.ராமர்கோயில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும்.
பாரதத்தின்அரசியலைகாவிமயமாக்கவேண்டும்.இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் தனபாலன் தலை வகித்தார்.வி.ஹெச்.பி தலைவர்கள்சன்னியாசிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்
- See more at: http://www.thoothuonline.com