செவ்வாய், 19 ஜூலை, 2011

கடலில் படகு மூழ்கி 4 மீனவர்கள் பலி (படங்கள் )




கடலில் படகு மூழ்கி 4 மீனவர்கள் பலி (படங்கள் )


தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (44). சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். அந்த படகில் ஆல்பர்ட், அவரது அண்ணன் மகன் டைசன் (15), திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்னாசி காந்தி (55), சாமி (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த தொம்மை என்கிற பாலு (70) ஆகிய 5 பேரும் தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க நள்ளிரவு 11 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.

நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சூறாவளி காற்று வீசியது.

இதனால் கடலில் ராட்சத அலைகள் எழும்பின. இதில் சிக்கி படகு கவிழ்ந்தது.   படகில் இருந்த 4 பேர் கடலில் மூழ்கினர். மீனவர் பாலு மட்டும் படகை பிடித்து உயிர் தப்பினார். இன்று காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த பாலுவை மீட்டனர்.

பின்னர் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி 4 பேரையும் தேடினார்கள்.   அப்போது மீனவர்கள் இன்னாசி காந்தி, சாமி ஆகிய 2 பேரின் உடல்கள் வலையில் சிக்கி கிடந்தது.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடலுக்குள் சென்று 2 பேரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பாலுவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடலில் மூழ்கியவர்களில் ஆல்பர்ட் மற்றும் சிறுவன் டைசன் ஆகியோரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களது உடலை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.





படங்கள் : ராம்குமார் nanri nakkeeran
nakkeennna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif