வியாழன், 6 ஜூன், 2013

பொய் வழக்குப் போட்ட தேவிபட்டிணம் காவல்துறை

பொய் வழக்குப் போட்ட தேவிபட்டிணம் காவல்துறையைக் கண்டித்து பொங்கி எழுந்த தமுமுக.

தேவிப்பட்டினம் ம.ம.க ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டிக்கிறோம்...

தேவிப்பட்டினம் தமுமுக சார்பில் பொதுமக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியருக்கும் கலவரம் குறித்து உண்மை நிலையை விளக்கி நியாயம் கேட்டு மனு...

கடந்த 31-05-2013 அன்று தேவிப்பட்டினத்தில் படையாச்சி தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவில் பால்குட காவடி மற்றும் திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேவிப்பட்டினம் நவபாஷபாணம் கடற்கரையில் வழிபாடு நடத்துவதற்காக சென்றவர்கள் தேவிப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகில் வரும்போது வழக்கத்திற்கு மாறாக கொட்டு மேளம் அடித்துக்கொண்டும், பட்டாசுகளை வெடித்துக்கொண்டும் வந்தார்கள். அதற்கு அப்பகுதியை சேர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்து காவல்துறையினரிடம் புகாரும் தெரிவித்தனர்.

பிறகு தேவிப்பட்டினம் நவபாஷபாணம் கடற்கரையில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது சின்னப்பள்ளிவாசல் அருகில் அதே போல கொட்டு மேளம் அடித்துக்கொண்டும், பட்டாசுகளை வெடித்துக்கொண்டும் வந்தனர். அப்போது மக்ரிப் தொழுகை எனப்படும் அந்திசாயும் தொழுகை மேற்படி சின்னப்பள்ளிவாசலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தொழுகைக்காக வந்தவர்கள் மேற்படி ஊர்வலக்காரர்களின் செயல்களை ஆட்சேபித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஊர்வலக்காரர்கள் பெரிய கற்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் பெரியபள்ளிவாசல் அருகில் வரும்போதும் ஊர்வலக்காரர்கள் அதே செயலில் ஈடுபட்டும் தொழுகை முடிந்து வரும் நேரத்தில் பெரியபள்ளிவாசல் உள்ளேயும் கற்களை தூக்கி வீசியதில் பள்ளிவாசலின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. அப்போது முஸ்லிம் இளைஞர்கள் திருப்பி தாக்கியுள்ளனர் அது வன்முறையாக மாறியுள்ளது.

இச்சம்பவம் முஸ்லிம்கள் தரப்பில் தற்செயலாக நடைபெற்றதாகும். ஆனால் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டது போன்ற ஒரு தோற்றத்தை காவல்துறையினர் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர். மேலும் முஸ்லிம்கள் வீடுகளில் நல்லிரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி காவல்துறையினர் ஏறிக்குதித்து அப்பாவி இளைஞர்களை கைது செய்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தினர்.

இச்சம்பவம் கேள்விபட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜாஹிர் உசேன் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் காவல்துறைக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறை சார்பு ஆய்வாளருடன் இணைந்து அமைதி படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார். நள்ளிரவு 3 மணிவரை காவல்துறையுடன் இணைந்து அமைதி முயற்சியை மேற்கொண்டார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக படையாச்சி தெருவை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் எஸ்.பி பிரிவு சீனிவாசன் ஹோம்கார்டு கருப்பைய்யா மற்றும் வன்னுவராஜா, பூமிராசு, குப்புசாமி, பெரியசாமி, ரத்தினம், மணி (மீன்கடை) ஆகியோர் கூட்டணி அமைத்து பழிவாங்கும் நோக்கத்துடன் ஜாஹிர் உசேனை பற்றிய பொய்யான தகவல்களை உயர் அதிகாரிகளிடம் கூறி குற்றவாளி போல சித்தரித்துள்ளனர். அதோ போல் அங்குள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் பொய்யான தகவல்களை கூறியும் மேற்படி படையாச்சி தெருவை சேர்ந்தவர்களுக்கு பிடிக்காத பெயர்களையும் சேர்த்து எழுதிக்கொடுத்துள்ளனர். இது திட்டமிடப்பட்ட பழிவாங்கும் செயலாகும். மேற்படி பழிவாங்கும் அனைத்தும் நடவடிக்கை காவல்துறை உதவியுடன் நடைபெற்றுள்ளது. மேலும் முதலில் கலவரத்திற்கு காரணமானவர்கள் படையாச்சி தெருவை சேர்ந்தவர்களே ஆனால் முஸ்லிம்கள் மீது அதிக நபர்கள் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் போட்டுள்ளனர்.

எங்களின் நியாயமான கோரிக்கைகள்:-

1. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் ஜாஹிர் உசேன், முகம்மது ரபி, ராவுத்தர், ரபியுத்தீன், 17 வயது பள்ளி மாணவரான முகம்மது பாசில் ஆகியோரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

2. வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் பெயர்களை நீக்க வேண்டும்

3. விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்.

4. கலவரத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையை சேர்ந்த சீனிவாசன் உள்பட அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. சத்துணவு பணியாளரான கருப்பைய்யா ஹோம்கார்டு என்ற பெயரில் காவல்துறைக்கு பொய்யான தகவல்களை கொடுத்து முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார். வரும் காலங்களில் காவல் நிலையத்திற்கு வந்து உள்ளூர் மக்கள் குறித்து பொய் தகவல் கொடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

6. தாக்குதலில் சேதமடைந்துள்ள பள்ளிவாசல் தலவாடங்கள் குறித்து உரிய வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. வரும் காலங்களில் மத ஊர்வலங்கள் பள்ளிவாசல்கள் தவிற்த்த மாற்று பாதையில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு கொடுக்கபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif