வெள்ளி, 15 ஜூலை, 2011

தீ வைத்து துவம்சம் செய்கின்றன


Friday, 15 July 2011 18:52 கொல்லுமாங்குடியில் நடந்த கொலையும் அதனை தொடந்து நடந்த தீ வைப்பு சம்பவம் நடந்தது என்ன ? எறிந்த கடைகளின் பகுதி . 10-7-2011 இரவு 7 மணிக்கு கடுவங்குடி சாமிநாதன் ரவுடிகளால் ஓட ஓட விரட்டி வெட்டப் படுகிறார்.விபரீதத்தை உணர்ந்து அங்கிருந்தவர்கள் காப்பாற்ற நினைக்கும் முன் தரையில் விழுந்த அவரின் உயிர் பிரிந்தது .கொலை கும்பல் எவ்வித அலட்டலும் இல்லாமல் மிக நிதானமாக வெளியேறுகிறது.கண்டிப்பாக கூலிப் படையின் வேலையாகத்தான் இருக்கும்.இதைத் தொடந்த நிகழ்வுகள் தான் நம்மை பேர் அதிர்ச்சிக்குள் ஆக்கியது. இரவு 8 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப் படுகிறது.கடை தெரு வெறுச்சொடி கிடக்கிறது.இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் ஆத்திரத்தில் பஸ், லாரி கண்ணாடிகளை உடைக்கின்றனர் காவல் துறை முன்னிலையிலே. அந்த கும்பல் சுமார் 8:20 க்கு சாமிநாதன் கொலைக்கு அரிசி மண்டி செல்வம் தான் காரணம் என்ற சந்தேகத்துக்கு உள்ளாகிறார் . இதனால் ஆத்திரமடைந்த இக்கும்பல் அவரின் அரிசி மண்டிக்கு தீ வைத்து துவம்சம் செய்கின்றனர்.செல்வம் கடையிலிருந்து சுமார் 200 மீட்டர் அருகிலுள்ள கடைதெருவின் மையப் பகுதிக்கு வந்து சங்கர் என்பவற்றின் டீ கடையிலிருந்து மண்ணெண்னை பெற்றுக் கொண்டு அங்கு நின்ற மக்களை விரட்டி அடித்துவிட்டு பாட்டிலில் உள்ள மண்ணெண்னை மதினா டீ ஸ்டால் மீது ஊற்றி தீ வைத்து எரிக்கிறது .அதற்க்கு அடுத்து PTR உணவகதிர்க்கும் பின்னர் அசன் ஜவுளி ஸ்டோர் ஷட்டருக்கு கீழே மண்ணெண்னை ஊற்றி பற்ற வைக்கின்றனர்.பக்கத்தில் உள்ள சர்புதீன் என்பவர் பெட்டிக் கிடைக்கும் தீ வைய்த்த கும்பல் 6 கடைகளுக்கு அப்பால் உள்ள நேஷனல் மளிகை கடையிலும் முஸ்லிம் கடை என்பதால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கின்றனர்.இருவது கடைகளை தாண்டி அந்த கும்பல் மதினா மளிகை தீ வைக்க அந்த கும்பல் செல்கிறது ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் நட்ராஜ் என்பவர் எனது கட்டடத்தை தீ வைக்காதீர்கள் என்று கை எடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டுக் கொள்ள அந்த கடையை விட்டுவிட்டு எதிரில் உள்ள கையில் இருந்த எதிர்புறம் உள்ள காய்கறி கடையில் வீச அந்த தீகூரை பிடித்து எரிகிறது.மாடியில் உள்ள கூரையிலும் தீ பிடித்து எரிகிறது.இது சங்கர் கொத்தனாரின் கட்டமாகும்.கூரையில் பிடித்த தீ பரவாமல்இருக்க அங்கு வந்த அருந்ததியினர் தீயை அனைத்து விட்டனர்.இவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால் கடை தெரு முழுவதும் நாசமாய் ஆகி இருக்கும்.இதில் யார் யார் எரித்தனர் எதற்காக எரித்தனர் என்று காவல் துறை இது வரை விசாரித்ததாக தெரியவில்லை.தீ வைத்ததை பார்த்த சாட்சிகள் டீ கடை உரிமையாளர் சங்கர் மதினா கடையின் உரிமையாளர் நட்ராஜ் இன்னும் சிலர். இதிலிருந்து நமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் , கொலையுண்ட சாமினதான் அ.தி.மு.க பிரமுகரின் நன்னிலம் ஒன்றிய துணை செயலாளர் அன்பு இவர்கள் இருவரும் மணல்மேடு சங்கர் சம்பந்தப் பட்டவர்.CBI விசாரணைக்கு உள்ளானவர்.கடந்த வாரம் தான் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகிறார்.மூன்று நாட்களுக்கு முன் சாமிநாதன் தற்கொலைக்கு முயன்று மருத்துவரால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்.கொலைக்கான காரணம் செல் போன் தகராறு என்று சொல்வதெல்லாம் பொய். அரிசி மண்டி செல்வம் நாவலனை கொலை செய்வதற்காக கூலிப் படையை தன் வீட்டில் வைத்திருந்த போது அடையாளம் காட்டிக் கொடுத்தவர் தான் இந்த சாமிநாதன்.தந்தன்தோப்பு பண்ணீரோடு தொடர்பு உடையவர். கடைத் தெருவை வன்முறையாளர்கள் தீ வைத்த போது கொலையுண்ட இடத்தில நான்கு காவல் துறையினர்களோடு அ.தி.மு.க பிரமுகர் கடுவங்குடி அன்பு அங்கிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.இவர் தான் இதற்க்கு தலைமை ஏற்றிருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். வழக்கில் திருப்புமுனை 12-7-2011 ஆண்டு செல்வம் ராஜா அப்பு ஆகியோர் நாங்கள் தான் கொன்றோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்து விடுகின்றனர் காரணம் காவல் துறையை திசை திருப்பி யாரையோ காப்பாற்ற நினைக்கின்றனர். தீ வைத்தது ஒரு கும்பலா? அல்லது வேறு ஒரு கும்பல் உள்ளதா ?தீ வைத்துக் கொண்டிருந்த கும்பலுக்கு யார் தூண்டி விட்டனர்?என்று காவல் துறை ஏன் விசாரிக்கவில்லை. சங்கர் டீ கடையிலிருந்து கடைகளை கொளுத்தக் கூடிய கெரோசின் RSS அமைப்பினுடைய தொடர்முடைய சங்கரின் தம்பி இதற்க்கு மூல காரணமாக இருக்கலாம் அல்லவா?காரணம் சங்கரின் கடை எந்த வித சேதாரமும் ஏற்படாதது எப்படி?சந்தேகம் வலுக்கிறது. காவல் துறை செய்த தவறுகள் தீ வைத்து அராஜகத்தில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு அருந்ததியின அப்பாவிகளை கைது செய்ய காரணம் என்ன ?யாரை திருப்தி படுத்த?எதிலும் ஈடுபடாத பஞ்சாயத்து தலைவர் அண்ணாதுறை (தி.மு.க.) அவரது தம்பி கலாநிதி மற்றும் அருந்ததியர் தெரு அப்பாவி 15 பொது மக்கள் குறிப்பாக அருந்ததியர் மக்கள் தீயை அனைதவர்கள்.அவர்கள் மீது கைது நடவடிக்கை . கொலையுண்ட சாமிநாதன் தெருவை சேர்ந்த அவரது உறவினர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை ?குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் மூன்று நாட்கள் கழித்து அலட்சியம் காட்டிய காவல் துறை அருந்ததியர் மக்கள் மீது வழக்கு பதிவு செய்தது ஏன்?தமிழக காவல் துறை கலங்கத்திளிருந்து தப்பிக்கவா?அல்லது யாரவது திருப்தி படுத்தவா?அப்பட்டமாக தெரிகிறது குற்றவாளிகளை காவல் துறை தப்பவிட்டு இருக்கிறது.நிறைய உண்மைகள் மறைக்கப் பட்டு உள்ளன.இதை வெளியே வர CBI விசாரணை தமிழக அரசு உத்தரவிடுவதை தவிர வேறு வழி இல்லை. தீ விபத்து நடந்து இது வரை இந்த தொகுதியின் புதிய MLA மற்றும் மாவட்ட கலெக்டர் பாதித்து நிற்கும் வியாபாரிகளை பார்த்து ஆறுதல் கூறவில்லை.பாவம் கொல்லுமாங்குடி வியாபாரிகள்.அதிலும் அப்பாவி அருந்ததியினர் மக்களை யார் காப்பாற்ற போகிறார்கள்?தமிழக அரசு எப்போதும் போல் குற்றவாளிகளை தப்ப விட்டு அப்பாவிகளை கைது செய்து ஏமாற்று நாடகத்தை இங்கேயும் நடத்துமா?பொருத்திருந்து பாப்போம்.விபரீதங்கள் தொடரும் என்றே நாம் ஆய்வு செய்த வகையில் அறிகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif