ஞாயிறு, 17 ஜூலை, 2011

இது விசயத்தில் என்ன முடிவை எடுப்பார்கள்?


நமது இந்தியை நாட்டின் மக்கள் சிந்திக்கவேண்டிய முக்கியமானவிஷயம் 
நமது நாட்டில் தொடர்படியாக நடந்து கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளை 
சற்று நிதானமாக நடுநிலையாக சிந்தித்து பாருங்கள் நமது நாட்டில் எங்கு 
குண்டுவெடித்தாலும் எதாவது ஒரு முஜாஹ்தீன்  அமைப்பின்மீது குற்றம் சாட்டி 
நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வழக்கை முடித்து விடும் 
நமது உளவுத்துறை.இப்படியாக பல அப்பாவி முஸ்லீம்கள் இன்னும் சிறையில் வாடி,
வதங்கிகொண்டுதான் இருக்கிறார்கள்.மாவீரன் கர்கரே மற்றும் நடுநிலையாலர்களோடு சேர்ந்து  உண்மைகளை   வெளி கொண்டுவந்தார் இந்துத்துவா அமைப்புகள்தான் காரணம் என்பதை.
பாவம் அவரையும் கொன்றுவிட்டார்கள் இந்த காவிபயங்கரவதிகள்.   இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத  இயக்கமான R.S.ச மற்றும் அது போன்ற 
அமைப்புகள்   தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
இதுமட்டும் இல்லாமல் இரு தினங்களுக்கு முன்னால் மும்பையில் நடந்த மூன்று இடங்களில் நடந்த 
குண்டு வெடிப்பை பற்றி மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும்  மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றும்  தீவிரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திக் விஜய்சிங்.

புலனாய்வு அமைப்புகள் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹேமந்த் கார்கரே கொல்லப் படுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் மாலேகான் குண்டுவெடிப்பை விசாரணை செய்து பெண் ஹிந்து பயங்கரவாத சாமியாரை கைது செய்ததால் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தம்மிடம் தெரிவித்தார் என்றும் அது குறித்த தொலைபேசி அழைப்பு வந்த தகவல்களை முன்னர் தெரிவித்து இருந்தார் திக் விஜய்சிங்.
இத்தனை  ஆதாரங்கள் இருந்தும் பலுயிர்களை பலிகொண்ட அமைப்பின் மீது நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?
குண்டுவெடிப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் காரணம் என்ற உண்மைகள் தெரிந்த பின்னும் 
அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பது ஏன்?
உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்?
மத்தியில் ஆளும் காங்கிரசின் கண்கள் மூடியுல்லதா? அல்லது கண்கள் கட்டப்பட்டுள்ளதா? கண்களை கட்டியவர்கள் யார்?
இரண்டு முறை தடை செய்யப்பட்ட இயக்கம் மீண்டும் தடை செய்யப்படுமா?நடுநிலையாளர்களும், நாட்டின் நலம் விரும்பிகளும், நீதியாலர்களும், நம்தேசம் முன்னேறவேண்டும் என்று நினைப்பவர்களும்,நடுநிலை அமைப்புகளும்,நம்நாட்டு மக்களும் இது விசயத்தில் என்ன முடிவை எடுப்பார்கள்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif