திங்கள், 25 ஜூலை, 2011

பெரியவர்களுக்கு

ஹசன்(ரலி)  அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்கள் இருவரும் ஒரு பெரியவர் அங்கத்த்தூய்மை என்னும் ஒளுவை தவறாக செய்து கொண்டிருப்பதை பார்த்தார்கள்.இருவருக்கும் அது பொறுக்கவில்லை பிழையை சுட்டிக்காட்டவேண்டும்.ஆனால்  அவரோ  வயதில் மூத்தவர் என்ன செய்வது என்று இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த பெரியவரை நெருங்கினார்கள்.
பெரியவரே! நாங்கள் இருவரும் ஒளு செய்கிறோம்.சரியாக செய்கிறோமா என்று பார்த்து சொல்லுங்கள் என்றனர்.அவரும் சரி என்று சொல்லி இருவரும் ஒளு செய்வதை கூர்ந்து பார்த்ததில் தன் பிழை அவருக்கு புரிந்தது. குழந்தைகளே நீங்கள் சரியாகதான் செய்கிறீர்கள் நான்தான் பிழையாக செய்தேன்.இனிமேல் சரி செய்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
      அல்லா குர்ஆனில் கூறுகிறான்  (நபி மூசா(அலை) ஹரூன்(அலை) இருவருமகிய)நீங்கள் அவனுக்கு(பிர்அவ்னுக்கு)நளினமாக உபதேசம் செய்யுங்கள் அவன் நல்லுணர்ச்சி    பெறலாம் அச்சம் கொள்ளலாம் என்று கூறினோம்.
இதுதான் நபி(ஸல்) கற்றுகொடுத்த இஸ்லாம். 
நன்றி மனாருல் ஹுதா

1 கருத்து:

 photo Animation4.gif