ஈமான் கொண்ட விசுவாசிகளே!உங்களையும், உங்கள்குடும்பத்தாரையும் நரகத்தை விட்டு பாதுகாத்திடுங்கள்.அதன் எரி பொருட்கள் மனிதர்களும்,கற்களும்தான் (அல்குர் ஆன்)
நபியே! முஃமின்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திகொள்ளட்டும்.மேலும் அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பதுகாத்துகொள்ளட்டும் (அல்குர் ஆன் )
முஃமினான பெண்கள் தங்கள் அழகை கணவன்மார்களை தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்தாமல் இருக்கட்டும் (அல்குர் ஆன்)
திடீரென்று (அந்நிய ஆண்கள் மற்றும் பெண்களை) பார்ப்பதைபற்றி நபியவர்களிடம் கேட்டேன்.அதற்கு நபியவர்கள் கூறினார்கள் "உனது பார்வையை திருப்பிக்கொள்" என்று ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஈமானாகிறது எழுபது சொச்ச கிளைகளைக்கொண்டதாகும்.வெட்கமாகிறது ஈமானில் ஓர் கிளையாகும். (அல்ஹதீஸ் )
உங்களில் ஒவ்வொரு நபர்களும் பொறுப்புதாரிகளே!உங்களின் பொருப்பைபற்றி மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவீர்கள் (அல்ஹதீஸ்)
பெற்றோர்களே! சற்று நின்று கவனித்து வாழ்க்கைபாதையில் செல்லுங்கள்.நலவுகள் அதில்தான் உள்ளது.இன்று நம் சமுதாய வாலிப ஆண்கள் மற்றும் பெண்களின் நிலைகளை உற்றுப்பாருங்கள்_அதில் பொறுப்பற்ற பெற்றோர்களின் முகம் தெரியும்.
இன்று வாலிப பெண்களும் ஆண்களும் இச்சையை மூட்டக்கூடிய தொலைக்காட்ச்சியையும்,சினிமாவையும் பார்த்துவிட்டு அந்நிய ஆண்களோடும் பெண்களோடும் தொ(ல்)லைபேசியில் பேசிக்கொண்டு காதல் என்னும் சாக்கடையில் விழுந்து சீரழிகிறார்கள்.
காதல் அருவருக்கத்தக்க சொல்லாக இருந்தது ஒரு காலம்.ஆனால் இன்று அது நாகரீக சொல்லாக மாறியிருப்பது எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும்? வாழ்க்கை என்பதை என்னவென்றே தெரியாத ஆறாம்-வகுப்பு படிக்கும் பிள்ளைகள் முதல் வாலிபப்பிள்ளைகள் வரை காதலிக்கிறார்கள் என்று!
வாலிப ஆணும் வாலிப பெண்ணும் அவர்களின் பொறுப்புதாரிகள் இல்லாத இடத்தில் தனியாக அமர்ந்து பேசுவதையும் பார்க்,பீச்,சினிமா என்று சுற்றி திரிவதையும் இஸ்லாம் அனுமதிக்காத செயல் அல்லவா?அது வெட்க்ககேடான செயலல்லவா? இதை கண்டிப்பது பெற்றோகளின் கடமையல்லவா?
கல்லூரி,பள்ளி,மார்கெட் என்று வெளியில் செல்லும் நம் சமுதாய பெண்களிடம் வலிய பேசி அவர்களை காதல் என்னும் தீய வலையில் விழவைத்து அவர்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டு சில தீயவர்கள் சுற்றி திரிகின்றனர்.எச்சரிக்கை கொண்டு நமது பெண்களை பாதுகாப்பது நமது கடமை அதற்கு சில வழிகள்.
*பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே அல்லாஹ்வை பற்றியும், ரசூலைப்பற்றியும் சொல்லிக்கொடுத்து ஈமான்,எகீனை பற்றி சொல்லிக்கொடுத்து அதை நினைவு கூறிக்கொண்டே இருப்பது.
*இறயச்சத்தை ஏற்படுத்தி ஐ வேளை தொழுகையை முறையாக தவறாமல் நிறைவேற்ற செய்வது.
*அந்நிய ஆண்களுடன் எந்த தொடர்பும் இருக்காமல் செய்வது.நமது வீட்டிற்கு வரும் வேலையாட்கள்,மற்ற நபர்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது.
*பர்தா முறையை கண்டிப்பாக பேணுவது,வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஆனாலும் சரியே.
*நமது பிள்ளைகள் செல் போன்களை பயன்படுத்துவதை தடுப்பது.
*ஆன், பெண் இருபாலரும் ஒன்றாக அமர்ந்து பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது.
*பெண்கள் சரியான துணையின்றி வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்ப்பது&தடுப்பது.
*நமது வீட்டு பெண்பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு தநியாக அனுப்பாமல் நாமே அழைத்து சென்று நேம் திரும்ப அழைத்து வருவதை கடைப்பிடிப்பது.
*நண்பர்கள் மற்றும் தோழிகளிடம் தொலை பேசியில் அதிக நேரம் பேசுவதை தடுத்து அவர்களை கண்காணித்து கண்டிப்பது.
*நீங்கள் இல்லாமல் உங்கள் பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் அதிக நாட்கள் தங்க அனுமதி மறுப்பது.
*பெண்கள் இன்று வெளிநாடு சென்று கணவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் தங்கி படிக்குமாறு செய்துவிட்டு நீங்கள் மட்டும் வெளிநாடு செல்வதுதான் தவறு.
*தாயின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும்,பாசத்திற்கும் ஏங்கி தவிக்கும் அப்பிள்ளைகளுக்கு மன உளைச்சல்,மன இறுக்கம், உடல் நலக்குறைவு, கல்வியில் ஆர்வமின்மை போன்ற பல இன்னல்கள் ஏற்படுகின்றது. அவ்வேளையில் கானல் நீராய் ஏற்ப்படும் புதிய உறவுகளின் ஆசைபேச்சிற்கும், சுயநலத்திற்கும் ஆட்பட்டு சிக்கி சீரழியும் நிலை ஏற்படும்.இது போன்ற நிலைகளிலிருந்து பிள்ளைகளை காப்பது பெற்றோர்களின் கடமையாகும்.
*தவறுகளை ஊக்குவிக்கும்,மேலும் தவறுகளுக்கு வழி காட்டக்கூடிய தொலைக்காட்ச்சியை உடனடியாக அகற்றுவது பெற்றோர்களின் தலையாய கடமை ஆகும்.
இது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் கடைப்பிடித்தால் இன்ஷா அல்லா வழி தவறாமல் இஸ்லாமிய நன்னெறியில் நடந்து வீட்டிற்கும், சமுயத்திற்கும் நற்பேற்றை வாங்கிட்ட்தரக்கூடிய அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நன்மக்களாய் வாழக்கூடிய மக்களாய் உருவாக்க முடியும்.
அடுத்தவர் வீட்டில் நடந்தால் செய்தி
நமது வீட்டில் நடந்தால் அவதி
சிந்தித்து செயல் படுவீர்! சீரான வழியை காட்டுவீர்! அல்லா அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக! ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக