ஞாயிறு, 24 ஜூலை, 2011

குமுறும் மக்கள் பொங்கி எழுந்தால் ?

இந்தியாவே! இந்தியாவே!!
நாங்கள் உனக்கு என்ன கெடுதல் செய்தோம் உனக்கு முழு சுதந்திரம் கொடுப்பதற்காக எங்கள் முன்னோர்கள் நிம்மதியை இழந்தார்கள்,
உறவை இழந்தார்கள்,உயிரை துறந்தார்கள்,இதற்கெல்லாம் உன் அன்பளிப்பு 
எங்களின் சுதந்திரத்தை பறிப்பது தானா உன் நன்றிகடன்?
எங்கள் சமுதாயத்தவர்கள் படும்பாட்டை நீ பார்.
@ எங்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது ஏன்? 
 @எங்கள் அப்பாவி இளைஞர்கள் தீவிரவாதி ஆக்கப்படுகிறார்கள் ஏன்?  
 @எங்கள் சமுதாய அப்பாவிகள் குற்றம் புரியாமல் தண்டனை                                                                                அனுபவிக்கிறார்கள்  ஏன்? 
@பலர் மரணித்தும் விட்டார்கள் ஏன்?
@கலவரம் என்ற பெயரில் பல்லாயிரம் உயிர்கள் பலிகொடுக்கப்படுவது ஏன்?
@எங்கள் சமுதாய பெண்களின் கற்புகள் அழிக்கபடுவது ஏன்?
@அதுவும் நாட்டை ஆளும் வர்கத்தினராலும் பாது காக்கும் ராணுவத்தாலும் இந்தியாவே உனக்கு வெட்கம் இல்லையா? 
@எங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது ஏன்? 
 @பயிற்சி அளித்து இராணுவத்தை குவித்து வைப்பது இந்திய மக்களை காப்பதர்காகவா  ,அல்ல கஷ்மீர் பெண்களின் கற்பை சூரையாடுவதர்க்காகவா இந்த இழி நிலை ஏன்?
@இப்படிப்பட்ட அநிதீயை எதிர்த்து போராடும் இளைஞர்கள் இந்திய இராணுவத்தினரால் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவது ஏன்?
@சட்டம் என்பது பாகுபாடு இன்றி இயற்றப்பட வேண்டும் ,அது பிரதமாராக இருந்தாலும் சரி இராணுவத்தினர் என்றாலும் சரி சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட  வேண்டும் அதுவே நியதி ஆனால் ஒருதலை பட்சமாக எங்களை நடதாட்டுவது ஏன்?  இதே நிலை உன்னில் தொடருமானால் மனதிற்குள் குமுறும் மக்கள் பொங்கி எழுந்தால் ?யோசித்து உனை திருத்திக்கொள் இலையெனில் திருத்தப்படுவாய்.
                                                                                         

1 கருத்து:

 photo Animation4.gif