தமிழக அரசே எச்சரிக்கையுடன் செயல்படு தமிழ் நாட்டை குஜராத்தாக மாற்ற துடிக்கிறார்கள் இந்துமுன்னணியினர். எனவேதான் இதுபோன்ற வன்முறையை தூண்டும் அமைப்புகளை கண்டு தடை செய்யாவிட்டால் தமிழகத்தை சுடுகாடு ஆக்கிவிடுவார்கள்.சமீபத்தில் கூட நெல்லை மாவட்ட இந்து முன்னணி தலைவர் ஆறுமுகசாமி. நகர தலைவர் செல்வம். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் சங்கரன் கோவில் நகரில் வீதிகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
அதில் வன்முறை மற்றும் மத உணர்வுகளை தூண்டும் விதமாக வாசகங்கள் இருந்தன. இதனை அறிந்த சங்கரகோவில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் இருவரையும் கைது செய்தார்.
மேலும் இந்த துண்டு பிரசுரங்களை அச்சடித்து கொடுத்த அச்சக உரிமையாளரையும் கைது செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய உளவு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நன்றி நக்கீரன்
இவர்கள் மீது விசாரனை மட்டும் போதாது இவர்களின் ஆணிவேர்களையும் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.அப்பொழுதுதான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழும். தமிழக அரசு இதில் மெத்தனம் காட்டாமல் மிக கவனமாக விரைவாக செயல்படவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவன் நலன் விரும்பி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக