வியாழன், 28 ஜூலை, 2011

உலக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஹிந்துத்துவா


உலக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஹிந்துத்துவா!

JULY 28, புதுடெல்லி:  நார்வேயில்  இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.

இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.

மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.

ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.

இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif