செவ்வாய், 19 ஜூலை, 2011

தயவு செய்து இதை படிக்காதீர்கள் சிரித்தே வயிறுவலி வந்திடும்

‎'மும்பை தொடர் குண்டு வெடிப்பை கண்டித்தும், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சினர், திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர்.போராட்ட நேரமான மதியம் 12 மணிக்கு, அனைத்து நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் ஆஜராயினர். போட்டோகிராபர் ஒருவர், கட்சியின் மாநில துணைத் தலைவரிடம், "ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள போவீங்களா... இல்லை, வெளியே கோஷம் போட்டுட்டு, "அரெஸ்ட்' ஆயிடுவிங்களா...?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், "வழக்கம் போல வெளியிலேயே முடிச்சுக்குவோம்... உள்ள போய், "கேஸ்' போட்டா, வெளியே எடுத்து விட ஆளுங்க இல்லையே... அடுத்த ரயில் மறியலுக்கு ஆள் சேர்க்க முடியாது' என, நமட்டு சிரிப்பு சிரித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., "இவங்களை, "அரெஸ்ட்' பண்ணி, அழைத்துச் செல்ல, வேன் கொண்டு வர்றேன்...' என இன்ஸ்பெக்டரிடம் கூறியதும், இன்ஸ்பெக்டர், "பல வருஷமா இவங்க ஆறு பேருதான் போராட்டத்துக்கு வர்றாங்க... வேன் அளவுக்கு எல்லாம், "ஒர்த்' இல்லை... கையை பிடிச்சு கூப்பிட்டு போயிடலாம்...' என்றதும் அருகில் இருந்த அனைவரும் சிரித்தபடி நகர்ந்தனர்.

நன்றி; தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif