வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

18b557cacc7171cbaea8b949b174_grande
ஸ்ரீநகர்:போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டதை கண்டித்து தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி விடுத்த முழு அடைப்பு கஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்தது.
கல்வி நிலையங்களும், வியாபார நிறுவனங்களும் மூடிக்கிடந்தன. அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை குறைவாக இருந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸோப்போரில் ஜூலை 31-ஆம் தேதி போலீஸ் கஸ்டடியில் சித்திரவதையின் காரணமாக நஸீம் ராஷித் என்ற அப்பாவி இளைஞர் படுகொலைச் செய்யப்பட்டார்.
மாநில அரசின் தோல்விதான் இளைஞரின் மரணம் என பி.டி.பி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. போலீஸ் பிடித்துச்சென்ற இளைஞரை மரணித்த நிலையில் அளித்தபிறகு மாஜிஸ்ட்ரேட் அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டதை குறித்து பி.டி.பி தலைவர் மெஹ்பூபா முஃப்தி கேள்வி எழுப்பினார். போலீஸின் தாக்குதலால்தான் இளைஞர் மரணமடைந்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. முதல்வர் உமர் அப்துல்லாஹ் மனித உரிமைகளை மீறும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பதிலாக கொடூரமான செயல்களின் மூலமாக மகிழ்ச்சியடைகிறார் என மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.nanri thoothu onlin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif