வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நேட்டோ தாக்குதலில் கடாஃப் மகன் பலி?

லிபியாவின் மேற்கு நகரமான ஜிலைடானில் அதிபர் கடாஃபியின் இளைய மகன் நேட்டோ படையினர் தக்குதலில் கொல்லப்பட்டதாக தங்களுக்குச் செய்தி வந்தது என்று அதிபருக்கு எதிரான புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதிபர் கடாஃபியின் இளைய மகன் கமீஸ் கடாஃபி இன்றைய தாக்குதலில் பலியான 33 பேர்களில் ஒருவர் என்று புரட்சிப்படையினர் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திரிபோலியில் உள்ள அதிகாரிகள் இந்தத் தகவல்களை இன்னும் உறுதி செய்யவில்லை. நேட்டொ படைகள் ஜிலைடான் நகரில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டது ஆனால் தாக்குதலில் கடாஃபி மகன் கமீஸ் பலியானது குறித்து உறுதி செய்யவில்லை. கடாபியின் இளைய மகன் கமீஸ் கடாஃபி லிபியா ராணுவத்தின் 32வது படையை தலைமையேற்று வழி நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif