1964 ல். கோலாலம்பூரிலிருந்து ஜோகூர்பாருவிற்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்தேன்.அதற்கு முன்பே எனக்கு அறிமுகமாயிருந்த தமிழ் ஆசிரியர் சிலரும் வந்திருந்தனர்.ஓய்வு நேரத்தின்போது முஸ்லிம் அல்லாத ஒரு நண்பர் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.
"முஸ்லிம்கள்,கோழி,ஆடு முதல் மான், ஒட்டகம் வரையிலான எல்லா கால்நடைகளையும் இறைவனின் பெயரைக்கூறி அறுத்துத்தான் உண்ணுகின்றனர்.செத்துப்போனவைகளை சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர்.மீன்கள் பிடிக்கப்பட்டபின் செத்துவிடுகின்றன.செத்தமீன்களை சாப்பிடலாமா? "என்று கேட்டார்.
"உங்கள் கேள்வி நியாயமானதுதான்.உண்மையாகச்சொல்ல வேண்டுமானால் அங்கும் விஞ்ஞானம் விளையாடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். காரணம்,இஸ்லாமிய சட்டத்தில் ரத்தமும்,பன்றியின் இறைச்சியும் சாப்பிடுவது(ஹராம்) தடைசெய்யப்பட்டு இருக்கிறது .
விஞ்ஞானம் ஆய்வின்படி, செத்துப்போகும் உயிரினங்களின் ரத்தம் அதன் இறைச்சியுடன் கலந்து விடுகிறது.அதனால் அதன் மாமிசத்தை நாங்கள் உண்ணுவதில்லை. அறுக்கும்பொழுது அவற்றின் ரத்தம் உடலைவிட்டு வெளியாகிவிடுகிறது. அதயும் மீறி இறைச்சியில் ஒட்டிகொண்டிருக்கும் சில துளி ரத்தத்தையும் சுத்தமாக கழுவிய பின்னரே சமைக்கிறோம்", என்று கூறினேன்.
நன் பேசியதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அவரிடம் மீளும் கூறினேன்," மீன்கள் அப்படிப்பட்டதல்ல. அவை நீரை விட்டுப் பிரிக்கப்பட்ட பின் துடிதுடித்து சாகின்றன.அந்தச் சமயத்தில் அவைகளின் ரத்தம் சதையுடன் கலந்துவிடாமல் அதன் அடி வயிற்றில் வந்து தங்கிய பின் உறைந்து விடுகின்றது. மீனின் செதில்கள் உள்ள உட்ப்பகுதியில் சில துளிகள் ரத்தமிருக்கும். அத்தனயும் நாங்கள் அகற்றி விடுகிறோம்,' என்றேன்.
"குர்ஆனில் அப்படி இருக்கிறதா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அந்த ஆசிரியர்.
"உங்களுக்கு ஆகுமானதாக்கப்பட்ட (உயிருள்ள) வைகளை முறைப்படி அறுத்து சாப்பிடுங்கள் என்று வான்மறையில் கூறியிருக்கும் இறைவன்,சுவையான மீன் மாமிசத்தை உண்ணுகிறீர்கள் என்றும் குர்ஆனில் கூறுகிறான். இறந்துவிட்ட மீன் மாமிசத்தில் ரத்தம் தங்குவதில்லை என்பதை அன்றே அறிவித்துவிட்டது வான்மறை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆனின் மூலம் விஞ்ஞானத்துக்கு வழி காணப்பட்டுவிட்டது என்கின்றனர் இன்றைய ஆய்வாளர்கள்.அது உண்மையே," என்றேன் நான்.
"பன்றியின் இறைச்சியை இன்றும் பலர் சாப்பிடுகிறார்களே,அவர்களுக்கு எதுவும் ஆகுவதில்லையே.நீங்கள் ஏன் சாப்பிடக்கூடாது?" என்று மீண்டும் ஒரு கேள்வியை தூக்கிபோட்டார் அந்த நண்பர்.
"அல்லா ஆகாதது எனக்கூரிவிட்டால் அதற்கு கண்டிப்பாக காரணம் இருக்கும் என்று அன்று மக்கள் நம்பினர்.இன்று ஆய்வுகள் மூலம் அதனை மெய்பித்து இருக்கின்றனர். உடலை விட்டு ரத்தம் வெளியான பின் காற்றின் தன்மையால் அது உறைந்து விடுகின்றது.
பல கொடிய நோய்களை உண்டாக்கும் கிருமிகள் அதில் தொற்றிக்கொள்கின்றன.விஞ்ஞான முறையில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தை தவறுதலாக மற்றவரின் உடலில் செலுத்திவிட்டால் அவருக்கு மரணம் ஏற்படுகிறது. அது போன்றே, மற்ற உயிர்களின் ரத்தமும் நமக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் அதனை உண்ணக்கூடாது என குர்ஆன் தடை விதித்தது.
பன்றியின் இறைச்சியும் அப்படிப்பட்டதுதான் காம உணர்ச்சியை தூண்டக்கூடியவை அதில் அதிகமாக உள்ளன அதை உண்பவர்களுக்கு ரோசம் மட்டும் இருக்கும். வெட்கம்,மானம் என்ற எதுவும் இருக்காது என ஆய்வு கூறுகின்றது.
உதாரணத்திற்கு, உலக அளவில் இன்றைய ஆங்கிலேயர்களையும்,சீனர்களையும் எடுத்துகொள்ளுங்கள். மிகக்குறைவான ஆடைகளுடன் உலாவரும் எத்தனையோ பெண்களை நாம் பார்க்கிறோம்.பொது இடங்களில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் முத்தமிடும் மதி கேட்டவர்களும் இருக்கின்றனர். பெண்களை நிர்வாண நடனம் ஆடச்சொல்லி ரசிப்பவர்களும் உண்டு.இப்படி இன்னும் எத்தனையோ அனாச்சாரங்கள் மறைமுகமாக நடந்துக்கொண்டிருக்கின்றன.
இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள் என்பதற்கு காரணம்,பன்றிதான்!தனது ஜோடியை வேறொரு பன்றி புணர்வதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அதனால் தானோ என்னவோ,பன்றியின் இறைச்சியை உண்பவர்களும அப்படி நடந்து கொள்கின்றனர். அதனால் தான் குர்ஆன் அதற்கு தடைவிதித்திருக்கிறது.என்றேன்.
ஆக இறைவனால் தடை செய்யப்பட்டவைகளில் நன்மையையும்,அவன் ஏவிய விசயங்களில் தீமைகளையும் காணமுடியாது.
அறம் .அப்துல் சுப்ஹான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக