சனி, 8 அக்டோபர், 2011

முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்


கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.http://amumtaz.files.wordpress.com/2010/12/orient10.jpg?w=163&h=210
இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.
இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.
780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.
இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.
துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.
இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?
இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.
இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.நன்றி காரைக்கால் பி.எப்.ஐ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif