
அஹ்மதாபாத்:குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரியும் 2002-ன் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பிரமான பத்திரம் தாக்கல் செய்தவருமான சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் மற்றும் குஜராத்தின் ஐ.பி.எஸ் சங்கமும் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ் பட் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். சஞ்சீவ் பட்டின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியை சந்தித்த மகேஷ் பட், ‘நான் திரைப்படத்தில் நிறைய “ரீல் ஹீரோக்களை” பார்த்துள்ளேன் ஆனால் சஞ்சீவ் பட் மாதிரி உண்மையான ஹீரோவின் குடும்பத்தை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறினார். மேலும் இத்தகைய உண்மையான ஹீரோவின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன் என்றும் கூறினார்.
மேலும் சஞ்சீவ் பட் மாதிரி மகனை பெற்ற அவருடைய தாயின் கையில் முத்தமிட்டேன் மற்றும் இத்தனை துணிச்சல் மிகுந்த மகனை பெற அவர் உண்மையில் பேரு பெற்றவர் என்று கூறிய அவர் சஞ்சீவ் பட் போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதி வெற்றிபெற வேண்டும் என்றும் கூறினார்.
சஞ்சீவ் பட் மோடிக்கு எதிராக 2002-ல் நடைபெற்ற குஜராத் முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக பிரமான பத்திரம் தாக்கல் செய்ததால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக