ஹஸாரே குழுவினர் மீது செருப்பு வீச்சு
22 Jan 2012
டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஹஸாரே குழுவினர் மீது செருப்பு வீசப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவால் உரையாற்ற மேடையில் ஏறும் வேளையில் செருப்பு வீச்சு நடந்தது. அப்பொழுது கிரண் பேடி, மனீஷ் ஸிஸோதியா ஆகியோரும் மேடையில் வீற்றிருந்தனர்.
செருப்பு வீசிய கிஷன்லான் என்பவரை போலீஸ் கைது செய்தது. சரத் பவாரின் கன்னத்தில் அறைந்த வேளையில் ஹஸாரே அளித்த ஆட்சேபகரமான பேட்டியை கண்டித்து செருப்பு வீசியதாக கிஷன்லால் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை ஹஸாரே குழுவினர் உத்தரகாண்டில் பிரச்சாரத்தை துவக்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக