வியாழன், 26 ஜனவரி, 2012

நாடு ஒற்றுமையுடன் முன்னேறுவதற்காக இந்த தினத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:

குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் கொண்டாடும் தினமாக ஆண்டுதோறும் குடியரசு தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.


பல்வேறு மத, சாதி, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட
ுள்ள நமது நாட்டில் சமத்துவத்தையும் சமயச்சார்பின்மையையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக நமது அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது.

அரசியல் சாசனச் சட்டம் பறைசாற்றும் இந்த நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து நாடு ஒற்றுமையுடன் முன்னேறுவதற்காக இந்த தினத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லா)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif