ஞாயிறு, 22 ஜனவரி, 2012

:அமெரிக்க ராணுவ வீரர்களிடையே ராணுவ அத்துமீறல்களும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக




வாஷிங்டன்:அமெரிக்க ராணுவ வீரர்களிடையே ராணுவ அத்துமீறல்களும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக பெண்டகனின் அறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
2010-இல் ஐந்து தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2011-ல் 164 ஆக உயர்ந்துள்ளது.
தற்கொலை செய்வோரில் அதிகமானோர் ஆப்கானிலும், ஈராக்கிலும் நீண்டகாலம் பணியாற்றியவர்கள்.
2006 ஆம் ஆண்டை தவிர்த்தால் 2011-ஆம் ஆண்டு 64 சதவீதம் பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளன.
பாலியல் கொடுமைகளை செய்வோரில் 10 இல் ஆறு பேரும் போதைப் பொருளை உபயோகிப்பவர்கள்.
பாலியல் கொடுமைகளுக்கு பலியானோரில் பெரும்பாலோர் பெண் ராணுவத்தினர் ஆவர். நியமனம் கிடைத்து முதல் 18 மாதங்களில் இவர்களில் பெரும்பாலோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். பாலியல் கொடுமைக்கு காரணமானவர்களை இவர்களுக்கு நன்றாக தெரியும்.
போர்க்களத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கடுமையான மனோநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ராணுவ வீரர்களிடையே பாலியல் கொடுமைகளை குறைக்க அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவரும் வேளையில் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.நன்றி தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif