புதன், 2 மே, 2012

பல உயிர்களை பலிவாங்கிய ஹிந்துத்துவா

மும்பை:முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பல உயிர்களை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பூர்னா, பர்பானி, ஜால்னா மற்றும் நந்தித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது.
இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் மஹராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நடந்தேறியுள்ளது. இக்குண்டுவெடிப்புகளை மலேகான் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரியாக செயல்பட்ட கொலைச் செய்யப்பட்ட சுனில் ஜோஷியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.
2003-2006 காலக்கட்டத்தில் மத்திய மஹராஷ்ட்ரா மாநிலத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிமான்சு பான்ஸே, சஞ்சய் சவ்தரி உள்ளிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ அடையாளம் கண்டுள்ளது. இவர்கள் சுனில் ஜோஷியின் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif