
இன்று காலை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் செய்யது அபுதாகிர் வீட்டிற்கு வருகை தந்து நடந்ததை கேட்டறிந்தனர்.
அங்குள்ள பல்வேறு சமுதாய மக்களும் இந்த சம்பவத்தை கண்டித்து பொதுச்செயலாளரிடம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி கருத்து கூறிய பொதுசெயலாளர் பொதுமக்கள் அமைத்து காக்க வேண்டுமென்றும், மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதும் இதே கருத்தை வெளியிட்டார்.
உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இன்று மாலை தலைமை நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க உள்ளனர்.


thanks to tmmk.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக