திங்கள், 9 செப்டம்பர், 2013

முஸாஃபர் நகர் கலவரத்தை பரவச் செய்ய பாகிஸ்தான் வீடியோவை பயன்படுத்திய ஹிந்துத்துவா சக்திகள்!

முஸாஃபர் நகர் கலவரத்தை பரவச் செய்ய பாகிஸ்தான் வீடியோவை பயன்படுத்திய ஹிந்துத்துவா சக்திகள்!

முஸாஃபர் நகர்: ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருத்தியை தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக எழுந்த தகராறு கலவரமாக மாறியதன் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகளின் சதித் திட்டம் அடங்கியுள்ளது.
ஜாட் இனத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருத்தியை முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி அவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கலவரம் உருவானது.
இந்த கொலைக்கு பழி வாங்க கொல்லப்பட்ட வாலிபரின் உறவினர்கள் இரண்டு பேரை அடித்துக் கொலை செய்தனர். காப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கம் நிலவும் மேற்கு .பி.யில் குடும்ப கெளரவத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய படுகொலைகள் அபூர்வம் அல்ல.
ஆனால், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஹிந்துத்துவா சக்திகள் இச்சம்பவத்தை முதலீடாக பயன்படுத்த சதித் திட்டம் தீட்டினர்சகோதரியின் மானத்தை காக்க முன்வந்த ஹிந்து இளைஞர்களை முஸ்லிம்கள் அடித்துக் கொலை செய்தார்கள் என்ற போலியான வீடியோவை ஹிந்துத்துவா சக்திகள் பரப்புரை செய்தனர்.
பாரம்பரிய முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட சிலர் இரண்டு இளைஞர்களை கொலை செய்வது போன்ற காட்சி வீடியோவில் அடங்கியுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்ற சம்பவம் 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவமாகும்.
இதனை எடிட் செய்து கலவரத்தை பரவச் செய்ய ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகள் பயன்படுத்தியுள்ளனர். இணையதளம், ப்ளூ டூத் வழியாக காட்டுத் தீ போல இந்த வீடியோ பரவியது. உள்ளூர் பா... எம்.எல்.. உள்ளிட்டவர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.
மீரட் மாவட்டம் சர்தானா தொகுதி எம்.எல்.. தாக்கூர் சிங்கித் சிங், தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 500 பேர் அவருடைய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். “முஸாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்என்பது அந்த வீடியோவின் தலைப்பாகும்.பிரபல ஹிந்தி பத்திரிகையான தைனிக் ஜாக்ரன் இந்த வீடியோவின் ஸ்கீரீன் ஷாட்டை வெளியிட்டதன் மூலம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
வீடியோவின் அதிகாரப்பூர்வ தன்மையை பரிசோதிக்காமல் இப்பத்திரிகை வீடியோவின் காட்சியை புகைப்படமாக வெளியிட்டுள்ளது. தைனிக் ஜாக்ரனின் செய்தி ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. தாங்கள் முன்னர் வெளியிட்ட போலி வீடியொவை உண்மைப் படுத்த அவர்கள் தைனிக் ஜாக்ரனின் ஸ்க்ரீன் ஷாட் ஃபோட்டோவை பரப்புரை செய்தனர்.
பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த போலீஸ், வீடியோவை முடக்கியதோடு, ஃபேஸ்புக் மூலம் ஷேர் செய்த பா... எம்.எல்.. உள்ளிட்ட 229 பேர் வழக்குப் பதிவு செய்தனர்.
போலி ஆவணம் தயாரித்தல், வகுப்புவாதத்தை கிளர்ந்து விடுதல், சதித் திட்டம் ஆகிய பிரிவுகளிலும், .டி. சட்டப் பிரிவின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வீடியோவை தடை செய்த பிறகும் அதற்கு முன்பே இந்த வீடியோவின் சி.டி.க்கள் வேகமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் டி..ஜி. அருண் குமார் தெரிவித்துள்ளார்.
போலி வீடியோவைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மஹா பஞ்சாயத்துதான் பின்னர் உருவான கலவரத்திற்கு காரணமாகும். மஹா பஞ்சாயத்திற்கு வந்தவர்களுடைய பேருந்து மீது கல் வீசியதாக பரப்புரை செய்யப்பட்டது இரு சமூகங்களிடையே கலவரம் பரவ காரணமாகும். இதனைத் தொடர்ந்து இக்கலவரத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

- See more at: http://www.thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif