வெள்ளி, 22 ஜூலை, 2011

ஊழல் லஞ்சத்தை ஒழிக்க இறை அச்சமிக்க உறுதியான உள்ளம் படைத்த ஆட்ச்சியாளர்களால் மட்டுமே முடியும்

இந்திய தேசத்தின் ரத்த நாளங்களில் நுழைந்து மிகப்பெரும் சாம் ராஜ்யத்தை ஊழல் பூதத்தின் வலிமையான கோட்டைக்குள் ராம்தேவின் கபட நாடகமோ காவிகளின் முதலைக் கண்ணீரோ எந்தவித மாற்றத்தையும் எற்படுத்திவிட முடியாது. 
லஞ்சம் ஊழலை ஒழிக்க இறை அச்சமிக்க உறுதியான உள்ளம் படைத்த ஆட்ச்சியாளர்களால் மட்டுமே முடியும்.அது போன்ற நெஞ்சுரம் படைத்த ஆட்சியாளர்களை இந்த உலகிற்கு தந்தது மட்டுமல்ல,தரக்கூடிய தகுதியும் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.
அரசுப்பணிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள் அவர்களின் தகுதியும் சிறப்புகளும் என்ன,பதவி எற்ப்பதற்கு முன்பும் விலகிய பின்னரும் அவர்களின் சொத்துக் கணக்குகள் எப்படி ஆராயப்பட்டன என்பதற்கெல்லாம் நேர்வழி சென்ற கலீபாக்களின் வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு.
ஒரு ஆளுநர் ஆடம்பர வாழ்கையை மேற்கொண்டுள்ளார் என்ற முறையீடு வந்ததுமே குடியரசு தலைவர் ஹஜ்ரத் உமர் (ரழி) அவர்கள் விசாரணைக்கு உத்தரவிடுகிறார்.முறையீடு உண்மைதான் என்று மெய்பிக்கபட்டதும் அந்த ஆளுனரை ஆடு மேய்க்கும் பணிக்கு அனுப்பினார் உமர்.
லஞ்சத்திற்கு எதிராக,ஊழலுக்கு எதிராக,வறுமை, விலைவாசி,போதைக்கு எதிராக 
உறுதியான நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சட்டங்களால் மட்டுமே முடியும்.இந்த சமூகத்தீமைகளுக்கு எதிரான தெளிவான வழிகாட்டுதல்கள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளன.
ஆகவே ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு முதுகெலும்பாகவும்,இந்தியாவை பிடித்திருக்கும் சாபக்கேடான லஞ்சம், ஊழல்,போன்ற சமூகத்தீமைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு உயிர்நாடியாகவும் களத்தில் நின்று குரல் கொடுக்க இஸ்லாமிய இயக்கங்கள் முன்வர வேண்டும்.
இத்தகையத் தீமைகளை அழகிய முன் மாதிரிகளை கொண்ட நாம் அமைதியாக, மௌனியாக வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு சமூகத் தீமைகளுக்கான எதிர்ப்பியக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.இல்லையெனில் ஆங்காங்கே நடை பெரும் ஊழல் எதிர்ப்பியக்கங்களும் நீர்த்துப்போய்விடும் என்பதில் ஐயமில்லை.

1 கருத்து:

 photo Animation4.gif