2-ஜி ஊழலை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை எனது வாதத்தைத் துவங்க விரும்பவில்லை: ராசா
First Published : 16 Jul 2011 04:45:28 AM IST

புது தில்லி, ஜூலை 15: 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.
"சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் முன்னதாக எனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தால் அந்த விவரங்களை இவ்வழக்கில் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது குற்றப் பத்திரிகையில் எனக்கு எதிராக சி.பி.ஐ. பயன்படுத்தக்கூடும்' என்று ராசா கூறினார்.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ராசா இவ்வாறு தெரிவித்தார். ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இவ்வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீனில் தாங்கள் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காகக் குற்றச்சாட்டுப் பதிவை வேண்டுமென்றே சி.பி.ஐ. தாமதப்படுத்துகிறது என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்கூறினர்.
அதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதையும் அவற்றின் நகல்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கொடுப்பதையும் விரைந்து முடிக்குமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதி ஓ.பி. சாய்னி உத்தரவிட்டார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களைத் தொடங்கத் தற்காலிகமாக ஜூலை 20-ம் தேதியை நிர்ணயிப்பதாகவும் நீதிபதி கூறினார்.nanri dinamani

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக