சனி, 16 ஜூலை, 2011

மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனம்

மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனம் அடையாளம் தெரிந்தது

First Published : 15 Jul 2011 05:32:52 PM IST


புதுதில்லி, ஜூலை.15: மும்பை ஜாவேரி பஜாரில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளரை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
மேலும் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஒரு இ-மெயிலை சைபர் பிரிவு வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதில் சில வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தகவல் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். முன்பு பயங்கரவாதிகளிடம் தொடர்பு வைத்திருந்த பல்வேறு நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நடந்த 3 இடங்களிலும் சிசிடிவி விடியோ காட்சிகள் 11 சிடிக்களாக மாற்றப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என சிங் தெரிவித்தார்NANRI DINAMANI 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif