பிறர் மணக்க தன்னை வாட்டிக்கொண்டது மலர்.
தான் மணக்க பிறரை வாட்டுபவன் மனிதன்.
மனித உரிமை என்ற பெயரில் உரிமைகளை மீறுவான்
ஆனாலும் சுதந்திரம் கொண்டாடுவான்.
மனித உரிமை காக்கவேண்டும் பேண வேண்டும் என்று
பேனர் வைத்து உரக்கச்சொல்லி ஊரை கூட்டுகிறான்
ஆனால் உயர்ந்தவனுக்கும், தாழ்தவனுக்கும் நீதிகளை நீந்த வைக்கிறான்
ஆனாலும் சுதந்திரம் கொண்டாடுவான்.
உலரளிலும் உரிமை,சுதந்திரம் இவைகளை கேட்காதே
நான் செய்யும் குற்றங்களை வெளியில் கூறாதே மேலே அனுப்பிவிடுவேன்
ஆனாலும் சுதந்திரம் கொண்டாடுவேன்.
இனிப்புகளை வழங்கி கசப்புகளை அழிக்கவே சுதந்திரம்.
இனிப்புகளை வழங்குவோம் கசப்புகளை தொடங்குவோம்.
ஆட்சியாளர்களின் அன்பளிப்பு இது.
சுதந்திர தியாகிகளை சுதந்திரத்திற்கு பின்னரும் தியாகிகளாக வைத்து
கொண்டாடப்படும் சுதந்திரம்.
ஜாதி,மதம்,மோதல்கள் போதும் நல்லவர்களின் கூற்று.
முடைய முடியாத கீற்று
இவைகள்தான் அரசியலின் ஊற்று.
இரவு வேளையில் கொடுக்கப்பட்ட சுதந்திரம்
இன்னும் விடியாமலே இருக்கிறது.
என்ன சுதந்திரமடா எப்பொழுது விடியுமடா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக