இப்ராஹீம் இப்னுஅத்ஹம் (ரஹ்) அவர்களிடம் எங்களுக்கு என்ன ஆனது நாங்கள் துஆ செய்கிறோம் எங்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லையே ஏன்? என்று வினவப்பட்டது.
இப்ராஹீம் இப்னுஅத்ஹம் அவர்கள் சொன்னார்கள்.உங்களின் உள்ளங்கள் மரணித்துவிட்டன.அதற்கு அவர்கள் எங்களின் உள்ளங்களை மரணிக்க செய்தது எது? என்று வினவினார்கள்.
இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள் பத்து விஷயங்கள்.
முதலாவது:அல்லாஹ்வை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அவனுக்கு (ஹக்கை) உரியதை நீங்கள் நிறைவேற்றுவதில்லை.
இரண்டாவது: அல்லாஹ்வின் வேதத்தை படிக்கிறீர்கள் ஆனால் அதன் படி நீங்கள் அமல் செய்வதில்லை.
மூன்றாவது: அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களை பிரியப்படுவதை வாக்களித்துள்ளீர்கள்
ஆனால் அவர்களின் வழி முறையை விட்டு விட்டீர்கள்.
நான்காவது: ஷைத்தானிடம் விரோதம் கொள்வதை வாக்களித்துள்ளீர்கள் ஆனால் அவனையே பின்பற்றுகிறீர்கள்.
ஐந்தாவது: சுவர்க்கத்தை பிரியப்படுவதாய் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதற்காக அமல்கள் செய்வதில்லை.
ஆறாவது: நீங்கள் நரகத்தை அச்சம் கொள்வதாக சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் உள்ளங்கள் அதையே விரும்புகிறது.
ஏழாவது: மரணம் நிச்சயம் உண்டு என்று சொல்கிறீர்கள் ஆனால் அதற்காக நீங்கள் தயாரிப்புகள் ஏதும் செய்யாமல் இருக்கிறீர்கள்.
எட்டாவது: உங்களின் சகோதரனின் குறைகளில் நீங்கள் ஈடுப்படுகிரீர்கள் ஆனால் நீங்கள் உங்களின் குறைகளை விட்டுவிட்டீர்கள்.
ஒன்பதாவது: உங்கள் இறைவனின் அருட்ச்செல்வங்களை நன்றாக அனுபவித்து சாப்பிடுகிறீர்கள்
ஆனால் அதன் ஹக்கை நீங்கள் நிறைவேற்றுவதில்லை.
பத்தாவது: உங்களில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்கிறீர்கள்
ஆனால் அதன் மூலம் படிப்பினை பெறுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக