செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

நோன்பும் சில முதல் உதவிகளும்


மயக்கம்;
                  நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்கு கீழ் ஆட்க்கட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து ஒரு நிமிடம்  விடுவதன் மூலம் அந்த மயக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். 
தலைவலி;
                    கை கட்டை நகத்திற்கு கீழ்பகுதி முழுவதும் நகத்தை கொண்டு ஒரு நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும்.அதே போல் மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள் தலை வலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். தற்காலிக தலை வலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும்.இன்ஷா அல்லாஹ் 
வயிற்று உபாதைகள்;
                          தொப்புளிலிருந்து இரண்டு இன்ச் உங்கள் கைவிரலில் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுங்கள்,சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
                   கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால்,வயிறு உப்புசம்,வயிற்றில் சூடு,வயிறு கல்போட்டது போன்று இருப்பது,உடல் வழி போன்றவை தீரும்.
மூச்சு திணறல்;
                    இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர் மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒருநிமிடம் வைத்தால் மூச்சு திணறல் சரியாகும்.
              மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து,இதே முறையை மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக்கொள்ள உதவுங்கள்.
                     எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்யமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழமையாக நிறைவேற்றி,அதற்க்கான முழுமையாக நற்கூலியை பெற்றுக்கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக அமீன். 
நன்றி விடியல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif