திங்கள், 28 நவம்பர், 2011

இஸ்ரத் கொலையாளிகளைத் தூக்கிலிட வேண்டும்


19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், அம்சத் அலி ரானா, ஜீஷன் ஜோஹார் ஆகியோர்  2004 ஜூன் 15 அன்று குஜராத் காவல்துறையால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இவர்கள் நால்வரும் லஸ்கர் இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால், இக்கொலைக்கான காரணம் உண்மையானது அல்ல என்றும், இது போலியான என்கவுன்ட்டர் என்றும் சிறப்பு புலனாய்வுக்குழு அண்மையில் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  இஸ்ரத் கொலையாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஷ்ரத்தை அநியாயமாகக் கொன்றதன்மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு என்ன கிடைத்துவிட்டது?  இஷ்ரத்தை எங்களுக்குத் திருப்பித் தர அவரால் முடியுமா?  என்று இஷ்ரத்தின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார் .

இஷ்ரத் எங்களை எப்போதும் ஊக்குவித்துவந்தார். இப்போது அவர் இல்லாமல் நாங்கள் தனிமையில் இருக்கிறோம். இஷ்ரத்தைக் கொன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என அவரது சகோதரர் தெரிவித்தார்.
நன்றி இந்நேரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif