தன் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஓரு சிறப்பான பாதுகாப்பு படை தளபதி
தன் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஓரு சிறப்பான பாதுகாப்பு படை தளபதி General Sheikh Mohammed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces .
இந்த மாதிரி அரசியல் தலைவர்கள் வேண்டும்.
படிப்பினைக்கான சம்பவம் இதுதான்..!
=============================
எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும் அரபி சிறுமி.
ஸ்கூல் விட்டு ரோட்டில் அப்பாவின் கார் வந்து பிக் அப் பண்ணுவதற்காக அவர் வெயிட்டிங்.
(பொதுவாக... அரபு நாடுகளில் இதுபோல ஒரு சிறுமி ரோட்டோரத்தில் தனியாக நிற்பதை எல்லாம்காண முடியாது)
அந்த வழியாக காரில் வந்த அபுதாபி சுல்தானின் மகன் பட்டத்து இளவரசர் தன்னந்தனியாக நிற்கும் சிறுமியை பார்த்ததும் ஆட்சியாளன் என்ற பொறுப்புணர்வோடு... காரை நிறுத்தி சிறுமியை விசாரிக்கிறார்.
அப்பெண் தான் நிற்பது பற்றி விபரம் கூற... "சரி, என் காரில் வா... நான் உன் வீட்டில் உன்னை ட்ராப் பண்ணி விடுகிறேன்" என்று அபுதாபி இளவரசர் அழைக்க...
சிறுமி மறுத்து விடுகிறார்.
உடனே... தன்னை சிறுமியிடம் " General Sheikh Mohammed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces " என்று அறிமுக்கப்படுத்திக்கொண்டு... "
என்னுடன் பாதுகாப்பாக வரலாம், சிறுமியே... வா" என்று கூற...
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படையின் உச்ச தளபதியின் காரில் சிறுமியான நீ எரிச்செல்லலாம்" என்று உதவியாளர் பரிந்துரைக்க...
சிறுமி இப்போதும் மறுத்து விட, மீண்டும் காரணம் கேட்கிறார்.
"உங்களை எனக்கு தெரியும். இருந்தாலும்,#அந்நியருடன்_எல்லாம்_தனியே_போகக்கூடாது என்று என் அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்" என்று சிறுமி கூறுகிறார்.
மாஷாஅல்லாஹ்..!
உடனே... காரினின்றும் இறங்கி வந்து... பிளாட்ஃபார்மில் சிறுமிக்கு பாதுகாப்பாக பக்கத்திலேயே தம் உதவியாளருடன் அமர்ந்து விடுகிறார் பட்டத்து இளவரசர்.
சிறிது நேரத்தில் சிறுமியின் அப்பா வந்து அழைத்து செல்லும் வரை கூடவே இருந்து விட்டு பின்னர் கிளம்பிச்செல்கிறார்..!
பொதுவாக அரபி பெண்கள் இப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.
அந்த அபுதாபி கிரவுன் பிரின்சிடன் நிச்சயமாக நம்ம ஊர் ஜனநாயக அரசியல்வாதிகளுக்கும் கூட பொறுப்புணர்வுக்கான பாடம் உண்டு. —
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக