வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பேணப்பட வேண்டிய ஆடை கட்டுப்பாடு!



அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் சேலை அல்லது சுடிதாரும், ஆண்கள் பேண்ட் மற்றும் சட்டையும் அணிந்து வரவேண்டும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாகரீகம் என்கிற பெயரில் உடல் தெரியும்படி ஆடை அணிவது இன்றைய கல்லூரி பெண்கள் மத்தியில் அதிகமாகப் பரவியுள்ள சூழலில் தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பு வரவேற்புக்குரியதாகும்.

வெளிநாட்டு கலாச்சாரங்களும், போதை வஸ்துக்களும் தமிழகத்தை ஆக்டோபஸ் போல் ஆட்கொண்ட வேளையில், தமிழகத்துப் பெண்களை சீரழிப்பதற்காக சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டதுதான் லிமீரீரீவீஸீs என்று சொல்லக்கூடிய மிகமிக இறுக்கமான ஆடை.

2012&2013
ஆம் ஆண்டில் மட்டும் ஏறத் தாழ 1 கோடிக்கும் அதிகமாக லிமீரீரீவீஸீs (லெக்கின்ஸ்) விற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுக் கலாச்சாரம் எந்தளவிற்கு தமிழகத்தில் பரவியுள்ளது என்பதற்கு மேற்கண்ட புள்ளிவிபரமே சான்றாகும். ஏற்கனவே பெரும் அச்சுறுத்தலுக்கும், பாலியல் துன்பங்களுக்கும் பெண்கள் ஆளாகி வரும் வேளையில் இதுபோன்ற இறுக்கமான ஆடைகள் குற்றவாளிகளை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.
இந்தச் சூழலில் பெண்களின் பாதுகாப்புக் கருதி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அறிவிப்பு உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக அரசும் அறிவித்த இந்த ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மாணவ மாணவிகளும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆடை கட்டுப்பாட்டை விதித்ததோடு நின்றுவிடாமல் மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வியை அரசுகள் வழங்க வேண்டும் என்பதோடு ஆடை கட்டுப்பாட்டு விதியைத் தொடர்ந்து பேண மாணவ, மாணவிகளைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

ஏற்கனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆடையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த தமிழக அரசு, அதை எந்த அளவிற்கு அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

ஏற்கனவே சினிமா போதையில் சிக்கியுள்ள ஆண்களையும், சீரியல் போதையில் சிக்கி யுள்ள பெண்களையும் மேலும் சீரழிக்கும் பொருட்டு ஹிந்தியில் உள்ள சீரியல்களை மொழிபெயர்த்து அதை தமிழகத்து சேனல் கள் பணமாக்குகின்றன. இதுபோன்ற சீரியல்களில் வரும் பெண்களைப் போல் தாங்களும் மாறவேண்டும் என்றெண்ணியே தமிழகப் பெண்களை தங்கள் உடை அலங் காரங்களை மாற்றியமைத்தனர். எனவே இதுபோன்ற சீரியல்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை என்ற தகவல் வேதனை அளிக்கிறது. சிறிய நாடு களான இலங்கை, சிங்கப்பூர் நாட்டின் பல்கலைக்கழகங்கள் கூட அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கின்ற பொழுது, மாணவ மாணவிகளை ஒழுங்குபடுத்தி அவர்களை கல்வியின் பால் ஈடுபாட்டோடு வழிநடத்த வேண்டிய கடமை இருக்கிறது.

ஆடைகளை ஒழுங்குபடுத்தினால் கல்வி யின் தரம் உயர்ந்து விடுமா? என சில முற்போக்கு முட்டாள்கள் கேள்வி எழுப்பலாம். கல்வியை மேம்படுத்த ஆடைக் கட்டுப்பாடும் ஒரு வழி என்பதை மறந்துவிடக் கூடாது. ஆபாசமான ஆடைகள் இரு பாலருக்கும் தவறான எண்ணங்களை விதைத்து அவர் களை வழிகெடுக்கின்றன என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும். பாலியல் சீரழிவுகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் ஆடை சீரழிவுகள் ஒரு காரணம் என்பதை குற்ற வாளிகள் வாக்குமூலத்தில் கூறுவதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலை நாடுகளில் குடும்ப அமைப்பு சீர்குலைந்ததற்கும், ஒழுக்கம் வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கியக் காரணம் ஒழுக் கத்தை வலியுறுத்தாத கல்விதான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியா என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு தேசம். இங்கு பண்பாடுகளும், ஒழுக்கம் சார்ந்த கலாச்சாரங்களும் தொன்றுதொட்டு பேணப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு நாட்டில் வளரும் தலைமுறையிடம் ஒழுக் கத்தையும், பண்பாட்டையும் சிறிது வயதி லிருந்தே ஊட்டி வளர்ப்பது முக்கியமாகும். அந்த அடிப்படையில் தமிழக அரசின் அறிவிப்பை அனைவரும் ஏற்கவேண்டும். குறிப்பாகப் பெற்றோர்கள் இதை நடைமுறைப் படுத்துவதில் மிகுந்த அக்கறைக் காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த அறிவிப்பு வெற்றிபெறும்.

நன்றி : மக்கள் உரிமை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif